பக்கங்கள்

புதன், 12 ஜனவரி, 2011

  <script src="http://www.clock-desktop.com/js/embed.js"></script>
  <script type="text/javascript" language="JavaScript">obj=new Object;
     obj.clockfile="http://www.clock-desktop.com/js-clock/Aquarium.7art";
     obj.width=256;obj.height=192;obj.wmode="transparent";showClock(obj);
  </script><br><a href="http://www.clock-desktop.com/crystal_clock.shtml" style="font-size:8.7px;">clock-desktop.com</a>

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்


தோற்றம்17/1/1917.
பிறந்த இடம்கண்டி - இலங்கை
தந்தை பெயர்திரு. கோபாலமேணன்
தாயார் பெயர்திருமதி. சத்தியபாமா
சகோதரர் பெயர்திரு.எம்.ஜி.சக்கரபாணி
பள்ளியின் பெயர்கும்பகோணம் ஆணையடி பள்ளி.
படிப்பு3-ம் வகுப்பு
கலை அனுபவம்7 வயது முதல்
நாடக அனுபவம்1924 முதல் 1963 வரை - 40 வருடங்கள்
சென்னை வருகைசென்ட்ரல் ரயில் நிலையம் அருகில்-1932 யானைகவுனி
சென்னையில் முதலில் வசித்த இடம்பங்காரம்மாள் வீதி
திதையுலகில் அறிமுகம் செய்தவர்திரு.கந்தசாமி முதலியார்
திரை உலக அனுபவம்1934 முதல் 1977 வரை - 44 வருடங்கள்.
நடித்து வெளிவந்த படங்கள்137 படங்கள்
கதாநாயகனாக நடித்த திரைப் படங்கள்115 படங்கள்
முதல் படம் வெளியான தேதி28/03/1936 - சதிலீலாவதி
முதல் வேடம்காவல் துறை அதிகாரி - சதிலீலாவதி
முதல் கதாநாயகன் வேடம்ராஜகுமாரி - ஜுபிடர் நிறுவனம்
100 வது படம்தமிழில்-ஒளி விளக்கு - 20/09/1968
கடைசி படம் வெளியான தேதி14/01/1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
மறைவுக்கு பின் வெளியான படம்அவசர போலீஸ் 100
அரசியல் அனுபவம்1933 முதல் 1987 வரை - 55 ஆண்டுகள்
முதன் முதலாக இருந்த இயக்கம்இந்திய தேசிய விடுதலை காங்கிரஸ்
தி.மு.க.வில் இருந்த ஆண்டுகள்1950 முதல் 1972 வரை
அ.தி.மு.க. துவங்கிய ஆண்டு1972
தமிழக முதல்வரானது1977 முதல் 1987 வரை - 11 வருடங்கள்
சென்ற வெளிநாடுகள்மலேஷியா, இலங்கை, பர்மா, சிங்கப்பூர்,ஹாங்காங், பாங்காக், தாய்லாந்து, ஜப்பான்,பிரான்ஸ், கிழக்கு ஆப்பிரிக்கா, லண்டன்,ரஷ்யா, அமெரிக்கா, மொரீஷியஸ்.
மறைவு24/12/1987

எம்.ஜி.ஆர் 




அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை (கறுப்பு, சிவப்பு, நடுவில் அண்ணாவின் உருவம்) புரட்சித் தலைவரின் கருத்துப்படி அமைத்துக் கொடுத்தவர் மற்றொரு முன்னாள் மேலவை உறுப்பினரான ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து ஆவார்.


புதிய இயக்கத்தின் பெயரையும் கொடியின் அமைப்பையும் அறிவித்த புரட்சித் தலைவர், அந்தப் புதிய கட்சியின் அமைப்புச் செயலாளராகத் ‘தென்னகம்’ நாளேட்டின் ஆசிரியரான கே.ஏ.கிருஷ்ணசாமியை நியமித்தார். தங்கள் புரட்சிநாயகன் புதியகட்சியைத் தொடங்கிவிட்டார்; அக்கட்சிக்கு அறிஞர் அண்ணாவின் பெயரையே சூட்டிவிட்டார் என்பதை அறிந்த எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் அகமகிழ்ந்தனர்; ஆனந்தக் கூத்தாடினர். உடனடியாகத் தமிழகம் முழுவதிலும் அண்ணா தி.மு.க. கிளைகள் உருவாக்கப்பட்டன. கட்சிக் கொடிகள் அவசர அவசரமாய் உருவாக்கப்பட்டு ஏற்றப்பட்டன.

தமிழகத்தில் மட்டுமின்றித் தமிழர்கள் வாழும் பெங்களூர், பம்பாய் முதலிய நகரங்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கிளைகள் உருவாக்கப்பட்டன. அதுவரை தி.மு.க. என்று வழங்கப்பட்டுக் கொண்டிருந்த கழகத்தை அதன்பின்னர் புரட்சித்தலைவர் ‘கருணாநிதி கட்சி’ என்றுதான் வழங்கினார்.

கருணாநிதி கட்சியிலிருந்து இலட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் விலகி அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தனர். புரட்சித்தலைவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது அவர் ஏற்கெனவே சட்ட மன்ற உறுப்பினராய் இருந்தார். எனவே, சட்டமன்றத்தில் அப்பொழுது அ.தி.மு.க.வின் பலம் ஒன்றாய் இருந்தது. அடுத்த சில நாள்களிலேயே எஸ்.எம். துரைராஜ் குழ. செல்லையா, சௌந்தரபாண்டியன், ஜி.ஆர். எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்கள் புரட்சித் தலைவரின் அ.தி.மு.க.வில் சேர்ந்து அதன் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தினர்.

அப்பொழுது கடசித்தாவல் தடைச்சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க.வில் சேரவும், சேர்ந்த பின்னரும் நீடிக்கவும் சாத்தியப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், எஸ்.டி. சோமசுந்தரம், பாவலர் முத்துசாமி, கே.ஏ. கிருஷ்ணசாமி முதலியோரும் தொடக்கத்திலேயே அண்ணா தி.மு.க.வில் சேர்ந்திருந்தனர். அவர்களுள் பாவலர் முத்துசாமியைக் கழகத்தின் முதல் அவைத்தலைவராக நியமித்தார், புரட்சித்தலைவர். பின்னர் சி.வி. வேலப்பன். கே.காளிமுத்து, கோவை செழியன், ஜி. விஸ்வநாதன் முதலிய சட்டமன்ற உறுப்பினர்களும் புரட்சித் தலைவரின் அணியில் இணைந்தனர்.






புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மக்கள் திலகம், புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல் எனப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. ‘மக்கள் திலகம்’ என்று அவரை முதன்முதலில் வழங்கியவர் ‘கல்கண்டு’ ஆசிரியர் தமிழ்வாணன் ஆவார். ‘புரட்சி நடிகர்’ என்று அவரை விளித்தவர், கலைஞர் கருணாநிதி ஆவார். ‘பொன்மனச் செம்மல் என்று வழங்கியவர் திருமுருக கிருபானந்தவாரியார் ஆவார்.! ஆனால் புரட்சி நடிகராய் விளங்கிய எம்.ஜி.ஆரை முதன் முதலில் புரட்சித்தலைவர்’ என்று வழங்கியவர் ‘தென்னகம்’ ஆசிரியரும், அ.தி.மு.க.வின் முதல் அமைப்புச்செயலாளரும், பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினருமான கே.ஏ.கிருஷ்ணசாமி ஆவார்.

அ.தி.மு.க.வின் சார்பில், 1972 ஆம் ஆண்டு, நவம்பர் 3 ஆம் தேதியன்று, சென்னை கடற்கரை சீரணி அரங்கில் ஒரு பிருமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய கே.ஏ.கே. ”இதுவரை நம் தலைவரை நாம் அனைவரும் புரட்சி நடிகர் என்றே வழங்கினோம். இனிமேல் அவர் புரட்சி நடிகர் அல்லர். புரட்சித் தலைவர்! ஊழலை ஒழித்துக்கட்டும் தர்மயுத்தத்தின் தானைத் தலைவர்! இனி மேல் நாம் அனைவரும் அவரைப் புரட்சித் தலைவர் என்றே வழங்க வேண்டும்!” என்று கூறினார்.

அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டம் ”புரட்சித் தலைவர் வாழ்க!, புரட்சித் தலைவர் வாழ்க!” என்று விண்ணதிர முழக்கமிட்டது. கடல் அலைகளின் ஓசை சில நிமிடங்கள் அமுங்கிவிட்டது போன்ற நிலை அங்கே தோன்றியது. புரட்சி நடிகராய் இருந்த மக்கள் திலகம், பொன்மனச்செம்மலாகிப் புரட்சித் தலைவராய் மாறிய வரலாறு இதுதான்



திங்கள், 3 ஜனவரி, 2011

துளி துளி துளி மழையாய் வந்தாளே............

Paiya to hit screens on Pongal Day


துளி துளி துளிமழையாய் வந்தாளே...

சுட சுட சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்,
பூபோல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்....
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...
அழகாய் மனதை பறித்து விட்டாளே.......
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள்தான் போதுமோ....!
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுத்தான்
பூக்களும் பூக்குமோ...!
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்பார்வை.. ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறதோன்றும்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே....
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...
சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோழ்களில் சாயுவேன்..
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன்,
நெஞ்சிலே தாங்குவேன்,
காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள்,
காயமின்றி வெட்டி போட்டாள்..உயிரை ஏதோ செய்தாள்...
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டாள்...
கனவில் கூச்சல் போட்டாள்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே...

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே..

                                                                                                                               








Paiya Phots............